செயின்ட் சோடெர்டால்ஜியில் ஜெனெட்டாவிலுள்ள அஃப்ரெம் தேவாலயத்திலே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இதன்போது பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதே தவிர யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதனால் இந்த வெடிப்பு ஏற்பட்டு என்பதை கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் இதே தேவலாயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
