
மேற்கு வங்காளத்தில் வைத்தியர்களின் போராட்டம் இன்று ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், நாளை காலை முதல் 24 மணிநேரங்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய வைத்தியர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், நாளை காலை 10 மணி முதல் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்க தலைமையகத்தின் முன்னால் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவசரகால சிகிச்சைப்பிரிவு வழக்கம் போல் செயற்படும் என்றும் வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட ஏனையை அனைத்து பிரிவுகளும் நாளை காலை 6 மணிமுதல் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி வைத்தியர்களை கொடூரமாக தாக்கினர்.
இதைக் கண்டித்து அரச வைத்தியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்திவரும் வைத்தியர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனை வைத்தியர்களும் போராட்டத்தில் குதித்தனர். அரச மருத்துவமனைகளில் உள்ள சுமார் 300 வைத்தியர்கள் தங்கள் பணியை இராஜினாமா செய்துள்ளனர்.
இதனிடையே, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசின் கோரிக்கையை வைத்தியர்கள் நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
