
இந்தநிலையில் அப்போது ஜேர்மனியின் பெர்லின் நகரில் அமெரிக்கா போட்ட 100 கிலோ எடை கொண்ட இராட்சத வெடிகுண்டு வெடிக்காத நிலையில் அலெக்சாண்டர்பிளாட்ஸ் சதுக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜேர்மனிய பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
இதற்காக குறித்த பகுதியில் வசித்து வந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்ததாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
