LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 12, 2019

டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை வளர்க்க தடை – கனடா அரசின் புதிய சட்டம்

இயற்கை வளங்களையும், உயிரினங்களை
யும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ‘ஃபிரி வில்லி பில்’ (Free Willy bill) என்ற புதிய சட்டம் தொடர்பான மனு கனடாவின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாரும் திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின் மீன்களைப் பிடிப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், அவற்றை வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்யப் பயன்படுத்துவதற்கும் முற்றாகத் தடைவிதிக்க இந்தச் சட்டத்தின் ஊடாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை மீறுபவர்கள் இலங்கை மதிப்பில் இரண்டரைக் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, விலங்குகள், உயிரினங்களுக்காக குரல் கொடுத்துவரும் பீற்ரா அமைப்பு இந்த சட்டத்தை அமுல்படுத்தக்கோரி போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக இறுதியில் அந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7