ஐக்கிய நாடுகள் பயங்கரவாத ஒழிப்புக்கான குழுவினர் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மிச்சேல் கொன்னினஸுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழிமுறைகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மற்றும் இந்த செயல்முறைக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், லெயிலா எஸாரக்கி, ஆட்ரியா டி லாண்ட்ரி மற்றும் கீதா சபர்வால் ஆகிய ஐ.நா. உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது





