
வாட்டி, வதைத்து வரும் நிலையில் அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஒருவார காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டெல்லியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் இருந்துவரும் நிலையில் அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு கோடை விடுமுறை ஒருவார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வரும் 8ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூலை முதலாம் திகதி திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
