
புதிய இயக்குநராக தமிழரான கே. நடராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அந்தவகையில், இந்திய கடலோர காவல் படை இயக்குநராக கே.நடராஜனை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை கடலோர காவல் படையின் இயக்குநராக இருந்த ராஜேந்திர சிங் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கே. நடராஜன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றார்.
மேற்கு மண்டல கடலோர காவல்படை துணைத் தலைவராக இருந்த கே.நடராஜனுக்கே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பில் முதன்முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
