
கொண்டிருந்த அமெரிக்க இராணுவ கண்காணிப்பு ஆளில்லா விமானமொன்று இன்று ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த விமானம் ஈரானிய வான்வெளி எல்லையை மீறிய காரணத்தாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை இந்த சம்பவம் அமெரிக்காவிற்கு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் குறித்த நேரத்தில் இவ்விமானம் சர்வதேச கடலுக்கு மேல் இருந்ததாக அமெரிக்க இராணுவம் வலியுறுத்தியதுடன், ஈரானால் நடத்தப்பட்ட இந்த தூண்டுதலற்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நடுவில் தற்போது நிலவிவரும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
