
காரணமாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், தமிழக அரசின் கவனக்குறைவாலும் உள்ளுராட்சி அமைச்சரின் அக்கறையற்ற தன்மையாலும் தமிழக மக்கள் குடிநீர் இன்றி பல்வேறு இடங்களில் அவதியுற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் குடிநீர் பஞ்சமே இல்லை. எதிர்க்கட்சிகள் வீணாக பழி சுமத்துகின்றன கூறுகிறார்.
எனவே, அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையிலும், பொதுமக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையிலும் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மாவட்டம் தழுவிய ரீதியிலான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது.
சென்னையில் இன்று முதல் தி.மு.க.வினர் தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தந்தப் பகுதி வட்ட தி.மு.க. நிர்வாகிகள் காலிகுடங்களுடன் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குடிநீர் பிரச்சினையை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட 600இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
