
அதிபர் கிம் ஜொங் உன் இடையாயான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) வடகொரியாவில் இடம்பெறவுள்ளது.
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீன தலைவர் ஒருவர் வடகொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக இருநாட்டு தலைவர்களும் சீனாவில் நான்கு முறை சந்தித்துள்ளனர்.
கிம் மற்றும் ஜின்பிங் இடையேயான இன்றைய சந்திப்பில் நிறுத்திவைக்கப்பட்ட வடகொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்தும், பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுமென நம்பப்படுகிறது.
வடகொரியாவின் பிரதான வர்த்தக கூட்டாளியான சீனா, வடகொரியாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாக கருதப்படுகிறது.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின் ஊடாக வடகொரியாவின் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வடகொரியாவின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க பங்குதாரராக இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கு சீனா விரும்புகிறது.
சீன அதிபருடனான வடகொரிய அதிபரின் இந்த சந்திப்பு சீனாவுடன் வடகொரியாவுக்கு நல்லதொரு உறவு உள்ளதாக உலகுக்கு காட்டுவதற்கு உதவுமென நம்பப்படுகிறது.
