
விடுக்கப்பட்டுள்ளது.
கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்வதுடன் கற்பாறைகளும் சரிந்துவிழும் அபாயமுள்ளதால் குறித்த பகுதிகளிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், தொடர்ந்தும் கடும் மழை பெய்யும் பட்சத்தில், அது தொடர்பாக வெளியிடப்படும் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுமாறும் கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர கோரிக்கை விடுத்துள்ளார்.
