
சிறிசேன தனது விருப்பத்திற்கேற்ப நீக்க முடியாது எனவும் அவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதிகார ஆசையில் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சார்பு கட்சியினரே அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவ்வாறு அவற்றை நீக்குவதற்கு ஏதேனும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிடும்.
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடனேயே நாடாளுமன்றத்தில் 19 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
அதனை ஜனாதிபதி அவரது விருப்பத்திற்கேற்ப 18 மற்றும் 19 திருத்தங்களை நீக்க முடியாது. அதற்கான முயற்சிகள் முன்னெடுத்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” என கூறினார்.
