
அத்துடன், இவர்கள் தினமும் நாட்டில் நடக்கும் வீதி விபத்தைப் போன்றுதான் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ்ர மேலும் தெரிவிக்கையில், “மீண்டும் இந்த நாட்டில் பொது மக்களை இலக்கு வைத்து இது போன்றதொரு மிலேச்சத்தனமான அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது என்பதை பொறுப்புடன் சபதமாகத் தெரிவிக்கின்றேன்.
உயிரழந்த அப்பாவி உயிர்கள் முக்தியடைவதற்கு இந்த தாக்குதல்களை மேற்கொண்ட அடிப்படைவாதிகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான அடிப்படைவாதிகள் நிச்சயமாக இல்லாதொழிக்கப்படுவார்கள் என்று உறுதியளிப்பதோடு, அதற்கு அனைத்து மக்களதும் ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.
இன, மத பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து இவர்களை நாட்டிலிருந்து துடைத்தெறிய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
