
மேலும், இந்தச் செயற்பாடு பிழையான முன்னுதாரணத்தையே காண்பித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டினார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தற்போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒருமித்து பதவி விலகியமை அவர்களுக்கான ஒற்றுமையை எடுத்துக்காட்டினாலும் அது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
