
அ.ம.மு.க.யின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஒலிப்பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ்ச்செல்வன் பேசிய ஒலிப்பதிவு குறித்து, தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, டி.டி.வி தினகரன் ஆலோசனை ஒன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியுள்ளார்.
இதேவேளை நான் தவறு செய்திருந்தால் என்னை கட்சியிலிருந்து நீக்குங்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இவ்விடயம் குறித்து அ.ம.மு.க.உறுப்பினர் வெற்றிவேல் தெரிவித்துள்ளதாவது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளமையினாலேயே இத்தகையதொரு ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளார்.
ஆகையால், அவரது உறவுகள் உடனடியாக அவரை அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குவது அவசியம்” என வெற்றிவேல் கூறியுள்ளார்.
