
அந்தவகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி இதுகுறித்து விளக்கமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேராவுக்கு நீதவான் அழைப்பு விடுத்துள்ளார்.
வடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதித்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேரா பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
