
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாண்மை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்நிலையில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது குறித்தே ஆராய வேண்டும். அதனை விடுத்து வீண் முரண்பாடுகளை வளர்க்க கூடாது.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாவை ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள அக்கட்சியின் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் என்று எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது வரையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது.
பொதுஜன பெரமுன தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து உத்தியோக பூர்வ அறிவிப்பு விடுக்கப்படும் வரை கூட்டணி தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அதேவேளை இரு தரப்பினர் சார்பிலும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது என்பதே எமது நிலைப்பாடாகும்.
இதில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அது குறித்து ஆராயப்படும். அது வரையில் கூட்டணிக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என கூறினார்.
