தாய்லாந்தின் புதிய பிரதமராக பிராயுத் சான் ஓ ச்சா (Prayut Chan-o-Cha) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் 500 பேரின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தனாதொர்ன் ஜுவாங்குருன்குருவாங்கிட் (Thanathorn Juangroongruangkit) சுமார் 240 பேரின் ஆதரவை மட்டுமே பெறறுள்ளார்.
2014ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த பிராயுத், ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்புகள் நேற்று இடம்பெற்றிருந்தன.
அதன்படி தாய்லாந்து நாடாளுமன்ற மக்களவையின் 500 உறுப்பினர்களும் செனட் சபையின் 250 உறுப்பினர்களும் நேற்று வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





