
தொழிலாளர்களை கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து தாய்லாந்திழும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தெற்கு தாய்லாந்தில் உள்ள சோங்கலா மாகாண வனப்பகுதியில் உணவின்றி வைக்கப்பட்டிருந்த 15 மியான்மர் தொழிலாளர்களை தாய்லாந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனை அடுத்து மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை, கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு மியான்மரி மற்றும் இரண்டு தாய்லாந்தினர் உள்ளிட்ட 3 ஆட்கடத்தல்கார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது நடவடிக்கை தொடர்பாக பேசியுள்ள தாய்லாந்து பொலிஸ் இயக்குனர் ஜெனரல் சுச்சட் தீராசாவட், “கடந்த 5 மாதங்களாக பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருந்தாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கடத்துவது தொடர்ந்து வருவதை இச்சம்பவம் காட்டுகிறது,” எனக் கூறியிருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, சோங்கிலா மாகாணத்தில் உள்ள பங் கிலாம் மாவட்டத்தில் 14 மியான்மர் குடியேறிகளை மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இச்சம்பவத்திற்கும் தற்போதைய சம்பவத்திற்கும் தொடர்பிருக்கக்கூடும் என தாய்லாந்து பொலிஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகின்றது.
