ஸ்லீப் சஞ்சிகையினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
1,10,496 மாணவர்கள் மற்றும் 8,462 விளையாட்டு வீரர்களிடம் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் மனக்கவலை, தன்னைத்தானே வருத்திக்கொள்வது, தற்கொலை எண்ணம் போன்ற பல்வேறு விதமான மனநலப் பிரச்சினைகள் உருவாக போதுமான தூக்கமின்மையும் ஒரு காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அரிசோனா பல்கலைக்கழகப் பேராசிரியர் தியா ராம்சே,
‘கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மனக்கவலைகள், தற்கொலை எண்ணம் உள்ளிட்ட மனநோய் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளைப் பார்க்கையில் இப்பிரச்சினைகளுடன் தூக்கமின்மை எவ்வளவு வலிமையான தொடர்பு கொண்டுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
தூக்கமின்மை ஏற்படும் ஒவ்வொரு கூடுதலான இரவும் மனநோய்க்கான அறிகுறிகள் சராசரியாக 20 சதவீதம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
தூக்கமின்மையின் ஒவ்வொரு நாளும் கூடுதலாக அதிகரிக்கும் ஆபத்துகளின் பட்டியல்:
21 சதவீதம் மனச்சோர்வு, 24 சதவீதம் தன்னம்பிக்கையின்மை, 24 சதவீதம் கோபம், 25 சதவீதம் கவலை, 25 சதவீதம் தன்னை வருத்திக்கொள்ளும் விருப்பம், செயல்பாட்டு பிரச்சினைகளுக்கு 28 சதவீதம் மற்றும் தற்கொலை எண்ணம் 28 சதவீதம்.
நமக்குத் தேவையான ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவு தூக்கம் அவசியம்.
ஆனால் கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சரிவரத் தூங்குவதில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
