
கல்முனை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் வல்வெட்டித்துறையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபையை தரமுயர்த்தக் கோரி கல்முனையில் மதத் தலைவர்கள் 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரின் உறுதிமொழியை அடுத்து இன்று தற்காலிகமாக போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் கல்முனை பிரதேசசபையை தரமுயர்த்துமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுத்துவருகின்றனர்.
அந்தவகையில் கல்முனைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
