
பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியம் இன்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஷெஹான் திசாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் விடுத்தல், கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்குதல், 2015ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட விதவை மற்றும் அநாதரவற்ற பிள்ளைகளின் ஓய்வூதியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளின் கல்விக்கு இடையூறாக இருக்கும் தேவையற்ற ஆவணங்களை நிரப்பும் செயற்பாட்டை இல்லாமல் செய்தல் ஆகிய நான்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அனைத்து ஆசிரிய சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளின் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், சுமார் 15 ஆயிரம் அதிபர்கள் இரண்டு நாள் சுகயீன விடுமுறையை பெற்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
