
தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்னிலையாகியிருக்கவில்லை.
அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் முன்னிலையாகாத நிலையில், அவரை பிறிதொரு தினத்தில் முன்னிலையாகும்படி தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 18ஆம் திகதி உரையாற்றிய தயாசிறி ஜெயசேகர, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவிருந்தபோதும், ஹோட்டலில் தங்கியிருந்த பிரமுகர் ஒருவரைக் கருத்திற்கொண்டே தாக்குதல் தவிர்க்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தவே தெரிவுக்குழுவில் முன்னிலையாக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கப் போவதில்லையென தயாசிறி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
