பியர் ஸ்டோர் நிறுவனத்துடனான உடன்படிக்கையை இரத்து செய்ய, முதல்வர் டக் ஃபோர்ட்டின் புறோகிரசிவ் கொன்சவேடிவ் அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர உள்ளதாக பியர் ஸ்டோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.பியர் ஸ்டோர் நிறுவனத்துடன் கடந்த லிபரல் அரசாங்கம் பத்தாண்டு கால ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.
ஆனால், ஒன்றாரியோவில் பியர் விற்பனை செய்வது குறித்த நடைமுறைகளில் விரைவில் மாற்றம் கொண்டு வர, தீர்மானித்துள்ள புறோகிரசிவ் கொன்சவேடிவ் அரசாங்கம், பியர் ஸ்டோர் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு உடன்படிக்கையை இரத்து செய்வதன் மூலம் வீதி ஓரங்களில், சில்லறை கடைகளில் பியர் மற்றும் வைன் வகைகளை விற்பனை செய்வதற்கான சாத்தியம் உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.





