
மிட்லாண்ட் அவென்யூ மற்றும் மிட்வெஸ்ட் வீதிப் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 21 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
