
இதன்போது திடீரென அந்த வாகனம் புறப்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், ரொறன்ரோ பொலிஸார் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்ற நிலையில், அது ஸ்கார்பாரோ கோல்ஃப் கிளப் வீதி மற்றும் லோரன்ஸ் அவென்யூ கிழக்கு வீதிச் சந்திப்பில் பிறிதொரு வாகனத்துடன் மோதுண்டது.
அந்த வாகனத்தைச் செலுத்திவந்த 77 வயது ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், அதில் பயணித்த 74 வயதுப் பெண் ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பொலிஸாரினால் துரத்திச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்த எவரும் காயமடையவில்லை என்று ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
