
பா.ஜ.க.வின் தலைமை காரியாலயத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (சனிக்கிழமை) காலை, தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தியிருந்த மர்மநபர், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்
அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு, தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அலுவலகம் முழுவதையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஆனால், சோதனையின்போது எந்ததொரு சந்தேகத்துக்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதுடன் வதந்தி என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்த செயற்பாட்டினால் அப்பகுதியில் சில மணித்தியாலம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு, தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்த மர்மநபர் குறித்த விசாரணையை டெல்லி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
