
டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிதி மந்திரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஓ.பன்னீர்செல்வம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்திலேயே அதனுடைய தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
அந்தவகையில் பருவமழை பெய்யாமை, தட்பவெப்ப நிலை மாற்றங்கள், மாநிலங்கள் இடையே தீர்க்கப்படாத நதிநீர் பிரச்சினைகள் மற்றும் வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைவடைந்துள்ளது.
ஆகையால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் பயன்பெறும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் நீர்நிலைகளை முறையாக பராமரிப்பதற்கும் நீர் சேகரிப்பை மேம்படுத்ததுவதற்கும் ‘தூய்மை இந்தியா திட்டம்’ போன்ற ஒரு திட்டத்தை கணிசமான நிதி ஆதாரங்களோடு அறிமுகப்படுத்தலாம்.
மேலும் தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மராட்டிய மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்தது போல் தமிழக அரசுக்கும் ஒரு சிறப்பு தொகுப்பு நிதியாக 1,000 கோடி இந்திய ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
