
திருச்சி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “தேர்தலில் தோல்வி அடைந்த போது எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் தெரிந்த பின் நான் வருத்தப்படவில்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை மாற்ற வேண்டும். வாக்குச் சீட்டு முறை வேண்டும்.
தண்ணீர் பிரச்சினையால் உள்ளுராட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். எதிர்வரும் தேர்தல்களில் அ.ம.மு.க மாபெரும் வெற்றிபெறும். இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.கவையும் மீட்டெடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
