
மன்னார் நகர சபையின் 16 ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மாந்தை சந்தியில் உள்ள வரவேற்பு நுழைவாயில் தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது. குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் குறித்த வரவேற்பு நுழைவாயிலை மீண்டும் அமைக்க ஓர் அனுமதியை மன்னார் பிரதேச சபை வழங்கியது. அதனைத் தொடர்ந்து சில தினங்களில் குறித்த வரவேற்பு நுழைவாயில் அமைப்பதை நிறுத்தக் கூறியும் மன்னார் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைகளானது மன்னாரில் மதங்களுக்கு இடையிலும், மக்களுக்கு இடையிலும் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடிய செயற்பாடாக அமைந்துள்ளது. மன்னார் பிரதேச சபை இனி வரும் காலங்களில் இவ்வாறு முடிவுகளை மேற்கொள்ளாது மக்களுடன் இணைந்தும், சர்வமத தலைவர்களுடன் இணைந்தும் இந்த பிரச்சினைக்கு ஓர் முடிவை மேற்கொள்ள வேண்டும்.
இரு மதத்தவர்களும் ஒன்றினைந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு சிலர் அரசியல் இலாபத்திற்காக இந்த பிரச்சினையை பூதாகாரமாக்கிக் கொண்டு போகின்றனர்.
இந்து மக்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ மக்களாக இருந்தாலும் சரி இரு மத தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினையை ஒரு இணக்கப்பாட்டுடன் தீர்ப்பதற்கு இந்த நகர சபை உறுப்பினர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
