
கனேடியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீற்றர் வின்ரர்பேர்ன் என்ற கனேடியர் தனது குடும்பத்தினருடன் சிலியின் துறைமுகப் பகுதியான வல்பரைஸோ (Valparaiso) நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவரின் பொருட்களை இருவர் திருட முயன்றபோது இடம்பெற்ற கைகலப்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
