மின்னிலக்க நாணயங்களைக் கொண்டு எல்லைகடந்த கட்டணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. அத்தகைய சோதனையை இரண்டு மத்திய வங்கிகள் நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
செயல்திறனை மேம்படுத்தவும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அனுப்பப்படும் கட்டணப் பரிவர்த்தனைகளில் இருக்கக்கூடிய ஆபத்துகளைக் குறைக்கவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய கட்டணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே உள்ள முறைமைகள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதுடன், அதற்கான செலவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, புதியமுறையின்படி மேற்கொள்ளப்பபடும் பரிவர்த்தனைகள் மேலும் விரைவாகவும் பாதுகாப்பானதாகவும் குறைவான கட்டணத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






