கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து காஷ்மீர் பொலிஸ், தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ”நிகினா பானு என்ற பெண்ணே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆனால் அவரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என டுவிட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.






