
கொள்கையை மாற்றியமைக்க இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்களால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
அனைத்து வழக்கு தொடர்பாகவும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தாம் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை என கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த வகையான தண்டனை மனித கௌரவத்துடன் பொருந்தாது என சுட்டிக்காட்டிய கனடா, நீதி தொடர்பான மீள முடியாத தவறுகளிற்கு மரண தண்டனை வழிவகுக்கலாம் என்றும் எந்தவொரு நீதி முறையும் பிழையில் இருந்து விடுபடாது என்றும் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் அவசியமானவை எனினும் மரண தண்டனை மூலம் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்கத்தை கட்டுப்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.
இலங்கை மீண்டும் மரண தண்டனையை ஆரம்பிப்பது சர்வதேச கவனத்தை இலங்கையை நோக்கி திருப்பலாம். எனவே இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் இலங்கையின் கௌரவத்தை உயர்த்துவதற்கு பங்களிப்பை வழங்காது எனவும் தெரிவித்துள்ளது.
எனவே மரண தண்டனை தொடர்பாக இலங்கையர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இலங்கையின் நண்பர்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் கனடா தெரிவித்துள்ளது.
