
ஆடை டீசரில் இருந்த காட்சிகளை வைத்து அமலா பாலை கேலி செய்வதுபோன்ற, வடிவேலுவை இணைத்து மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த மீம்ஸ்கள் சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து இயக்குநர் ரத்னகுமார் தெரிவிக்கையில், ”மீம்ஸ்களை உருவாக்குவது அவரவர் கருத்து சுதந்திரம். இப்போது எல்லா விடயங்களையுமே வடிவேலு மீம்ஸ்களில்தான் வெளியிடுகின்றார்கள். அதற்கு ‘ஆடை’ திரைப்படமும் விதிவிலக்கு அல்ல. ‘ஆடை’ திரைப்படம் தனிமனித சுதந்திரத்தையும், சுயஒழுக்கத்தையும் பற்றி பேசுகின்றது’ எனக் கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ‘ஆடை’ இல்லா காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும், அத்தனை நாளும் ‘ஆடை’ இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகின்றது.
இப்படத்திற்கு தணிக்கை குழுவினரால் ‘ஏ’ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.
த்ரில்லர் கலந்த கதையம்சத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
பிரதீப்குமார் இசையில் விஜய் கார்த்திக்கண்ணா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தை ‘வீ ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
