
எல்லைப் பரப்புக்குள் பயணித்துக் கொண்டிருந்த கனேடிய போர்க் கப்பலை, இரண்டு சீனப் போர் விமானங்கள் மிரட்டி விரட்டியுள்ளதாக கனேடிய வெளியுறவுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனேடியப் போர்க் கப்பலான எச்.எம்.சி.எஸ். ரெஜினாவிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் சென்றுக்கொண்டிருந்த போதே, சீனாவின் சூ-30 ரக போர் விமானங்கள் இவ்வாறு விரட்டியதாக அந்தக் கப்பலில் இருந்த கனேடிய வெளியுறவுத் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான மிரட்டல்களை கனேடிய கடற்படை மீது சீன விமானப்படை மேற்கொண்டுள்ள போதிலும், இம்முறை மேற்கொண்ட இந்த மிரட்டலானது மிகவும் கடுமையானதாக இருந்தாக கூறப்படுகிறது.
