
பிரெஞ்சு தூதரகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்கு அருகே இரட்டை தற்கொலைகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
முதல் தாக்குதல் காலை 11 மணியளவில் தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் வாகனமொன்றைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்க பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்தின் கார் நிறுத்துமிடத்தில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததாகவும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மற்றும் பொதுமக்கள் மூவர் காயமடைந்துள்ளதாகவும் ரியூனிசிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
