
வியாபாரியான நிரவ்மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான சுவிஸ்லாந்தில் உள்ள 4 வங்கிக்கணக்குகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி சுமார் 283.16 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
அமுலாக்கத்துறை வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையவே நிரவ்மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத்தை சேர்ந்த பிரபல வைரவியாபாரியான நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
