
மாணவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மாணவனின் உடல் நிலை தேறி வருவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், மாணவன் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
