அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று (புதன்கிழமை) நாட்டி வைக்கப்பட்டது.
யாழ். பழைய பூங்கா வீதியிலுள்ள புதிய அலுவலக கட்டட வளாகத்தில் குறித்த அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச அதிபரால் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ரட்ணஜீவன் கூல், தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர், தேர்தல்கள் அலுவலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






