
ஒன்று கியூபெக் மாகாண சட்டசபையில் நேற்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த சட்டமூலத்தின்படி, புலம்பெயர்வோரை ஏற்றுக்கொள்வதற்கு, முன்னர் இருந்த, ‘முதலில் வருவோர் முதலில் ஏற்றுக்கொள்ளப்படுவர்’ என்னும் செயன்முறை மாற்றப்பட்டு, ‘விண்ணப்பிப்பவரின் திறமைகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர்’ என்னும் செயன்முறை உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்த புலம்பெயரும் வீசா முறை மாற்றம் போலவே அமைந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கியூபெக்கின் உள்துறை அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட், “பொதுநலன் கருதி, எந்தத் துறையில் தேவை இருக்கிறதோ அந்தத் தேவையை உறுதிசெய்யும் பொருட்டு, புலம்பெயர்தல் சட்டமூலத்தில் சில மாற்றங்களை மேற்கொள்கிறோம்” என்றார்.
மேலும் இதன் காரணமாக கியூபெக்கில் ஏற்கனவே வசிக்கும் 50,000 பேர் உட்பட பலர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருத்தம் அமுல்படுத்தப்படுத்தற்கு முன்னர் சுமார் 18,000 பேர் விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னர் விண்ணப்பித்தவர்கள் உட்பட புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் ஆறு மாதங்களுக்குள் பதில் வழங்கப்படும் என மாகாண அரசு உறுதியளித்துள்ளது.
