
4 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என வோட்டர்லூ பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ் ஸ்ட்ரீட்டில் தெற்கே பயணித்துக் கொண்டிருந்த வாகனம் யூனியன் வீதியின் இடதுபுறம் திரும்ப முயன்றபோது, எல்.ஆர்.டி ரயிலில் மோதியது.
வோட்டர்லூவில் யூனியன் வீதி மேற்கு மற்றும் கிங்ஸ் வீதி தென்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விபத்து தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அங்கு சென்ற பொலிஸார், 44 வயதான பெண்ணொருவர் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதே இந்த விபத்துக்குக் காரணம் என தெரிவித்துள்ளனர்.
வோட்டர்லூவில் குறித்த எல்.ஆர்.டி. ரயில் சேவை ஜூன் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
