
உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்வடைந்துள்ளது.
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்திலுள்ள குழந்தைகள் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியமை அண்மையில் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகிய குழந்தைகளை இனங்கண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் உயிரிழப்புக்கள் அதிகரித்த வருவதாக முசாபர்பூர் மாவட்ட சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். ஆகையால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக காணப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில் 89 குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் ஏனைய வைத்தியசாலையிலும் 19 குழந்தைகள் கெஜ்ரிவால் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
