
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் வியாழக்கிழமை வடகொரியாவுக்கு செல்வார் என இன்று (திங்கட்கிழமை) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வட கொரியாவிற்கு சீனாவிற்கும் நெருங்கிய தொடர்புடை உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் குறித்த விஜயம் அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் மீண்டும் பதட்டங்கள் ஏற்படாமல் சமாதானப்படுத்தும் முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் கொரிய தீபகற்பத்தின் நிலைமை குறித்தும் அங்கு நிலவும் அரசியல் தீர்மானத்தில் புதிய முன்னேற்றத்திற்கான அழுத்தம் குறித்தும் கலந்துரையாடுவார்கள் என சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனத் தலைவர் ஒருவர் 14 ஆண்டுகளின் பின்னர் வடகொரியாவுக்கு செல்லும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
