
ஒக்ரோபர் 31 ஆம் திகதி அன்று எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான திட்டத்தைத் பொரிஸ் ஜோன்சன் கொண்டுள்ளார் என்று றோரி ஸ்ருவேர்ட் தெரிவித்தார்.
இன்று ஐரீவியின் குட்மோர்னிங் பிரிட்டன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு பொரிஸ் ஜோன்சன் மீது குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற்றை எவ்வாறு வழங்கப்போகிறார் என்பது குறித்து பொதுமக்களுடன் பேசவும், தொடர்பு கொள்ளவும், மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்றும் றோரி ஸ்ருவேர்ட் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொரிஸின் கொள்கைகளுடன் தான் உடன்படவில்லை எனவும் அவரிடம் பிரெக்ஸிற்றை வழங்குவதற்கான எந்தத் திட்டத்தையும் தான் காணவில்லை என்றும் ஸ்ருவேர்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற முதல்சுற்று வாக்குப்பதிவில் றோரி ஸ்ருவேர்ட் 19 வாக்குகளை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
