தமது ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறிப்பிட்ட நபர்களை தாக்குவதற்காக இந்த இளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
வன்முறைத் தாக்குதல்களில் நேரடியாக தொடர்புபட முடியாத வயது வந்தவர்கள் இவ்வாறு இளம் பராயத்தினரை கூலிக்கு அமர்த்தியுள்ளதாக சில இளைஞர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற சில வன்முறைகளும், கொலைகளும் இவ்வாறே நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
திட்டமிடப்பட்ட வன்முறைக் குழுக்கள் முறுகல்களைத் தீர்ப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதை அறியமுடிகின்றது என்று மேர்செசைட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பாதுகாப்புத் தரப்பினர் இளைஞர்களின் கூற்றுகளை நேரடியாக தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும், அதில் சில வன்முறைக் கும்பல்கள் ‘இளம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை போதைப் பொருள் விற்பனைக்கும் வன்முறைத் தாக்குதல்களுக்கும் பயன்படுத்துவதாக” குறிப்பிடப்படுகின்றது.
