(முர்ஷீத்)
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு என்னும் தொனிப்பொருளிலான வீடமைப்பு திட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கேணிநகர் கிராமத்தில் மூன்று வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கேணிநகர் அபிவிருத்திக்குழு தலைவர் எம்.வி.ஹைதர்அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவிப் பொறியிலாளர் பி.கமலநாதன், தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.எல்.நளீர், ரி.டிலக்காந்தன், புணாணை கிழக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சிவாகரன், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கேணிநகர் கிராமத்தில் மூன்று வீடமைப்புத் திட்டங்களை உள்ளடக்கியதாக எழுபத்தைந்து வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இவ்வீட்டுத் திட்டமானது எழரை இலட்சம் ரூபாய் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சினால் மானியமான வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், ஐநூறு சதுர அடியைக் கொண்டமைந்த வீடாக அமையப்பெறவுள்ளது.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஏழு வீட்டுத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்று வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
