
சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஜியாங்சி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது.
இதன்காரணமாக ஜியாங்சி மாகாணத்தின் 23 மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
அத்துடன், வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளத்தினால் 58 வீடுகள் இடிந்து விழுந்தன. சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பெரும்பாலான இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அத்துடன், 356 000 பேர் இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
