பரவலாக நாடெங்கும் முற்றாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் நெதர்லாந்தின் பொதுத்துறை நிறுவனமான றோயல் கே.பி.என்-னி சேவை செயலிழந்தது. அதன் பின்னர் இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவைகளும் துண்டிக்கப்பட்டன.
இதற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், தொலைத்தொடர்பு சேவைகள் சட்டவிரோத ஊடுருவலுக்கு உட்பட்டதாக என்று தெரியவில்லையென அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொலைத்தொடர்புச் சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டனர். அவசர தேவைக்கு தொலைத்தொடர்பைச் சார்ந்து இருக்காமல் நேரடியாக பொலிஸ் நிலையம், மருத்துவமனைக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
