LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 26, 2019

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்த ஹொலிவுட் நடிகர்

சென்னையில் அண்மைக் காலமாக நிலவும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தண்ணீருக்காக மக்கள் படும் துயரம் குறித்து ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயோர்க் ரைம்ஸ், சென்னை குடிநீர் பற்றாக்குறை குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் அந்த செய்தியில் இடம்பெற்றுள்ளது.

அந்த புகைப்படத்தில், 2018 ஜூன் 15 ஆம் திகதி புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவோடு, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவு ஒப்பிடப்பட்டுள்ளது. சுமார் 46 லட்சம் மக்களுக்கு புழல் ஏரி நீரை வழங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ”மழை மட்டுமே சென்னை மக்களை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காக்க முடியும்” என ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். மழையால் மட்டுமே சென்னையை இந்த சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற முடியும்.

முற்றிலும் வெற்று கிணறு மற்றும் தண்ணீர் இல்லாத நகரம். நான்கு முக்கிய நீர் தேக்கங்கள் வறண்டு விட்டன. தென்னிந்திய நகரமான சென்னை நெருக்கடியில் உள்ளது.

கடுமையான நீர் பற்றாக்குறை அவசர தீர்வுகளை எட்டுவதற்கான கட்டாயத்தில் உள்ளது. குடியிருப்பாளர்கள் அரசாங்க தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பெற மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியது உள்ளது. நீர் நிலைகள் குறைந்துவிட்டதால், விருந்தகங்களும், உணவகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.

நகரத்தில் உள்ள அதிகாரிகள் மாற்று நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து வருகின்றனர் – ஆனால் சமூகம் தொடர்ந்து மழைக்காக பிரார்த்தனை செய்கிறது” என லியோனார்டோ டிகாப்ரியோ தனது பதிவில் கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7